2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
மதுரையில் நாளை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்
மதுரை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மதுரையில் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட மதுரை- வடக்கு, மேற்கு, வாடிப்பட்டி ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தொடா்புடைய வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து தீா்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.