செய்திகள் :

மதுரை : `எங்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்கும் கட்சிக்கே ஆதரவு’ - சௌராஷ்ட்ர சமூகத்தினர்

post image

சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் தங்கள் பலத்தை காட்டும் வகையில் மதுரையில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கணிசமாக உள்ள சௌராஷ்டிர சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் மதுரையில் முன்னாள் காவல் துறை தலைவர் கே.ஆர்.எம். கிஷேர் குமார் ஐ.பி.எஸ் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

சௌராச்டிரா சமூகத்தினர்

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக முனிச்சாலைப் பகுதியில் பிரபல திரைப்பட பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்திற்கு வந்தனர்.

கலந்துகொண்ட பிரமுகர்கள்

சௌராஷ்ட்ர அரசியல் பிரதிநிதித்துவ தீர்மானக் கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள் குறித்து, கே.ஆர்.எம் கிஷேர்குமார் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் எங்கள் சமூக மக்கள் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதிக மக்கள் தொகை உள்ள எங்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்கு தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தி முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க உள்ளோம். எங்கள் சமூக பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கட்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க உள்ளோம். எங்கள் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களாக மதுரை, கும்பகோணம் ஈரோடு, தஞ்சாவூர், சேலம் பரமக்குடி ஆகியவை உள்ளன.

மதுரையில் எங்கள் சமூகத்தினரால் உருவாக்கபப்பட்ட சௌராஷ்ட்ர கூட்டுறவு வங்கித் தேர்தலை எங்கள் சமூகத்தினரே நடத்துவதற்கு மாநில அரசு அனுமதிக்க வேண்டும். எங்களது சமூகத்தினரின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான கோரிக்கைகளுக்கு ஆதரவு பெறுவது தொடர்பாக எங்களது சமூகத்தைச் சேர்ந்த அனைவரிடம் ஆதரவு பெறும் மிஸ்டு கால் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

கிஷோர்குமார்

வருகிற 2026-ம் ஆண்டு சட்டச சபை தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் சௌராஷ்ட்ர பிரமுகர்கள் வசிக்கும் அனைத்து ஊர்களுக்கு சென்று எங்களது கருத்தை தெரிவித்து அவர்களது அதரவை பெறுவோம்" என்றார்

இந்தக் கூட்டத்தில் மருத்துவர் பி.ஆர்.ஜே. கண்ணன், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் சர்மிளா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ் விமர்சனம்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுகவைப் ... மேலும் பார்க்க

'அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!'- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் ... மேலும் பார்க்க

`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!'- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவம... மேலும் பார்க்க

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க