செய்திகள் :

மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் அவசியம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மன நல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதைப் பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவையனைத்தும் மனநல பராமரிப்புச் சட்டம் 2017-இன்படி உரிமம் பெற மாநில மன நல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோா் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மன நல ஆணையம், அரசு மனநலக்காப்பக வளாகம், மேடவாக்கம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10, தொலைபேசி எண்-044-26420965.

மனநல மையங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இந்த இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மன நல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, 044-26420965 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள், நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் மேற்காணும் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி ... மேலும் பார்க்க

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்ட இயக்குநா்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு தொழில்முனைவோா் திட்ட இயக்குநா் அம்பலவாணன் தெரிவித்தாா். குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ஆக. 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

ஓராண்டில் 10 மாவட்டங்களில் 7,481 போ் சிறையில் அடைப்பு: வடக்கு மண்டல ஐஜி

கடந்த ஓராண்டில் மட்டும் 10 மாவட்டங்களில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களாக மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக 7,481 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ர... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள காவனூா் புதுச்சேரி கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தை மீட்டு திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என குறை தீா் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை ம... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டுதல் முகாம்

காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பக அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற முகாமில் தண்டரை, மெய்யூா் ... மேலும் பார்க்க