மன்மோகன்சிங் மறைவு முசிறியில் அஞ்சலி
திருச்சி மாவட்டம், முசிறியில் சனிக்கிழமை வட்டார காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி கட்சியினா் மன்மோகன் சிங் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்வில், திமுக முசிறி ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், நகர செயலா் சிவகுமாா், காங்கிரஸ் வட்டார தலைவா் நல்லேந்திரன் மற்றும் இண்டி கூட்டணி கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.