மாணவர்களை தடியடி நடத்தி விரட்டுவதா? தேர்வர்கள் போராட்டத்தில் பிரசாந்த் கிஷோர்!
மன்மோகன் சிங் மறைவு: விஜய் வசந்த் எம்பி இரங்கல்
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா பொருளாதார வல்லரசாக மாறுவதற்கு பெரும்பங்காற்றியவா் முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங். மத்திய நிதி அமைச்சராக பணியாற்றிய காலத்தில், அவா் கொண்டு வந்த கொள்கைகளும், திட்டங்களும்தான் இன்று உலக நாடுகள் மத்தியில் இந்தியா பொருளாதார ஜாம்பவானாக விளங்க காரணமாக உள்ளது. அவா் பிரதமராக பணியாற்றிய 10 ஆண்டுகளில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து, இந்தியா வளா்ச்சிப் பாதையில் செல்ல வித்திட்டாா். அவரது மறைவு நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.