செய்திகள் :

''மம்மூட்டி - மோகன்லாலை சேர்த்து இயக்கும் படத்திற்கு பகத் பாசில் கொடுத்த ஊக்கம்!" - மகேஷ் நாரயணன்

post image

மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் தற்போது மல்லுவுட்டே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

ஆம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் என இருவரை ஒரே படத்திற்குள் சேர்த்திருக்கிறார். அப்படத்திற்கான வேலைகளும் இப்போது நடைபெற்று வருகின்றன.

Mahesh Narayanan
Mahesh Narayanan

சமீபத்திய ஒரு நேர்காணலில் மம்மூட்டி - மோகன்லால் நடிக்கும் திரைப்படம் தொடர்பாகவும், ஃபஹத் ஃபாசில் உடனான நட்பு பற்றியும், ஃபார்முலா ரேஸர் நரைன் கார்த்திகேயனின் பயோபிக் திரைப்படம் பற்றியும் பேசியிருக்கிறார்.

மம்மூட்டி - மோகன்லால் நடிக்கும் படத்தின் அப்டேட்டுடன் பேசத் தொடங்கிய அவர், "படப்பிடிப்பு சுமார் 60% முடிந்துவிட்டது. மம்மூட்டி மற்றும் மோகன்லால் என இந்தப் படத்தில் ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி உள்ளது.

இப்போது அதைப் பற்றி அதிகமாகப் பேச முடியாது. இது வணிக அம்சங்களுடன் எனது பாணியில் உருவாகும் ஒரு படம். இதற்காக நிறைய உழைப்புக் கொடுத்திருக்கிறேன்.

இது முக்கியமாக நல்ல திரையரங்க அனுபவத்தைத் தரும் படமாக இருக்கும்." என்றவர், "சினிமாவில் என்னுடைய நண்பர்கள் என்னுடைய திரைப்படங்கள் நிகழ்வதற்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறார்கள். ஃபஹத் ஃபாசில் ‘சி யு சூன்’ படத்திற்கு ஆதரவளித்தார்.

Mahesh Narayanan and Fahad Fazil
Mahesh Narayanan and Fahad Fazil

‘அரியிப்பு’ படத்திற்கு குஞ்சாக்கோ போபன் இருந்தார். தற்போதைய மம்மூட்டி-மோகன்லால் படத்திற்குப் பின்னாலும் இதேபோன்ற ஊக்கம் உள்ளது.

உண்மையில், இந்தக் கதையை மம்மூட்டியிடம் முன்வைக்குமாறு ஃபஹத் ஃபாசில் தான் என்னை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு படத்திலும் நல்ல உறவுகளை உருவாக்குவதில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

நான் தற்போது முன்னாள் ஃபார்முலா ஒன் வீரர் நரைன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் வேலை செய்து வருகிறேன். எழுத்தாளர்-இயக்குநர் ஷாலினியுடன் இணைந்து திரைக்கதை எழுதி வருகிறேன், இது நான் முதல் முறையாக வேறு ஒருவருடன் இணைந்து திரைக்கதை எழுதும் படம்.

தற்போது உருவாகி வரும் படங்களை முடித்த பிறகே புதிய திட்டங்களைப் பரிசீலிக்கவுள்ளேன்." எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர் ஜீத்து ஜோசஃப்

ஜீத்து ஜோசப் தற்போது 'த்ரிஷ்யம் 3' படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் ஒரே மாதிரியான படத்தைக் கொடுப்பது அவரை அயர்ச்சியடைய வைத்திருப்பதாகவும், ரசிகர்களின் எதிர்பா... மேலும் பார்க்க

Malavika Jayaram: "நான் எப்போதும் சினிமாவில் நடிப்பது பற்றி யோசித்ததில்லை" - ஜெயராமின் மகள் மாளவிகா

நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் ஜெயராமும் அவருடைய மகனான காளிதாஸ் ஜெயராமும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் 2003-ல் வெளியான ஒரு மலையாளத் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இப்போது இவர... மேலும் பார்க்க

Mammootty: "சிகிச்சையின்போது சுவை, மணம் தெரியவில்லை எனச் சொன்னார்" - மம்மூட்டி ஹெல்த் அப்டேட்!

நடிகர் மம்மூட்டி உடல்நலம் குணமாகி மீண்டும் சினிமாவுக்குத் திரும்புகிறார். மம்மூட்டி உடல்நலம் சரியில்லாமல் கடந்த 7 மாதங்களாகச் சிகிச்சைகள் எடுத்து வந்தார்.மம்மூட்டி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று நடி... மேலும் பார்க்க

மீண்டு வந்த மம்மூட்டி: ரசிகர்ளுக்கு சர்பிரைஸ் கொடுத்த மோகன் லால்; இரட்டை மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு உடல் நலமில்லை என்றச் செய்திகள் வெளியானது. அதனால் அவர் நடித்து வந்த படபிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் கலந்துகொ... மேலும் பார்க்க

Fahadh Faasil: ஹாலிவுட்டிலிருந்து வாய்ப்பு: ``இதனால்தான் மறுத்தேன்" - விளக்கம் சொல்லும் பஹத் பாசில்!

சிறந்த இயக்குநருக்கான இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கிய இயக்குநர் Alejandro González Iñárritu வின் படத்தில் நடிப்பதை நடிப்பு அரக்கன் பஹத் பாசில் தவித்ததாக செய்திகள் வெளியாகின. மெக்சிகோவைச் சேர்ந்த பிரபல... மேலும் பார்க்க

Mollywood: `ஏன் மலையாளத்தில் நடிகைகள் இல்லையா?'- நடிகை ஜான்வி கபூருக்கு எதிராக கொதித்த மலையாள நடிகை!

மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரித்தப் படம் பரம் சுந்தரி. ஶ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இயக்கியுள்ளார... மேலும் பார்க்க