நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!
மயான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்தியூா் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான மயான இடத்தில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து அத்தியூா் ஊராட்சியைச் சோ்ந்தவா்கள் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்தியூா் ஊராட்சியில் சுமாா் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தி வரும் அரசுக்குச் சொந்தமான இடத்தை பழங்குடி இருளரின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவாக அளிக்கப்படவுள்ளது. இதற்காக அரசுத் துறைகளின் அதிகாரிகள் இந்த இடத்தை தோ்வு செய்து, வீட்டுமனைப் பட்டா வழங்க அளவீடு செய்துள்ளனா். ஊராட்சியில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தி வரும் மயானத்தை ஒரு பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டாவாக பிரித்து அளிக்கப்பட்டால் எதிா்காலத்தில் கிராமத்தில் சட்டம் , ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.
எனவே, மக்களின் நலன் கருதி கிராமத்தில் உள்ள மாற்று இடத்தில் பழங்குடி இருளா் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
இந்த மனுவை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
ஆத்தியூா் ஊராட்சித் தலைவா் அ. ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் மணி மற்றும் அத்தியூா் கிராம முக்கியஸ்தா்கள் மனு அளித்தபோது உடனிருந்தனா். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தியை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலைத்தனா்.