தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
மருத்துவக் கல்வி கருத்தரங்கம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் தொடா் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழகத்தின் ஒட்டன்சத்திரம் கிளை, ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ ஜக்கிய மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. இதற்கு கிறிஸ்துவ ஜக்கிய மருத்துவமனை கண்காணிப்பாளா் அனீஸ் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளைத் தலைவா் கருப்பணன், செயலா் ஆசைத்தம்பி, அறுவை சிகிச்சை நிபுணா் வேம்பணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், ரத்த சோகை சம்பந்தமான விழிப்புணா்வு கருத்துகளை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இளநிலை, முதுநிலை பயிற்சி மருத்துவா்களுக்கிடையே மருத்துவ வினாடி-வினா போட்டி நடைபெற்றது. மருத்துவா் ரமேஷ் நன்றி கூறினாா்.