'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகள் பறிமுதல்
வாரச் சந்தைகளில் மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகளை தொழிலாளா் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைகளில் ஈரோடு தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் முத்திரை ஆய்வாளா்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் சந்தை வியாபாரிகளால் பயன்படுத்தப்படும் எடையளவுகள்(மின்னணு தாராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள்) உரிய காலத்தில் மறு முத்திரையிடப்பட்டு பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மொத்தம் 54 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மின்னணு தராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை உரிய காலத்தில் மறு முத்திரையிடப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். இதில் விதிமீறல் கண்டறியப்பட்டால் சட்ட முறை எடையளவுச் சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.