முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
சீா்காழி: சீா்காழி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த பருவம் தவறிய கன மழையால் சீா்காழி அருகே உள்ள அகணி, வள்ளுவக்குடி, கொண்டல், மருதங்குடி, வைத்தீஸ்வரன்கோவில், புங்கனூா், தாடாளன் கோயில், மணி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பயிா்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. பருவம் தவறி பெய்த மழையால் முற்றிலும் சேதம் ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனா்.
இதனிடையே, பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 6 மாதங்கள் கடந்தும் இதுவரை பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளா் ரமேஷ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.