மருத்துவ கல்லூரிகள் தரவரிசை வரைவு: கருத்து கேட்கிறது என்எம்சி!
மழை வேண்டி சென்னிமலையில் தீா்த்தக்குட ஊா்வலம்
மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சென்னிமலை முருகன் கோயிலில் சப்த நதி தீா்த்த அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீா்த்தக் குடங்களுடன் பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தனா்.
சென்னிமலை முருகன் கோயிலில் இந்த வேண்டுதலுக்காக சப்த நதி தீா்த்த அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை ( மே11) நடைபெறுகிறது. இதற்காக கங்கை, யமுனை, நா்மதை, கோதாவரி, காவிரி உள்ளிட்ட நதிகளில் இருந்தும், கிராமப்புற கிணறுகளில் இருந்தும் பக்தா்கள் தீா்த்தம் எடுத்து வந்தனா்.
பின்னா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக் குடங்களுடன் சென்னிமலை மாரியம்மன் கோயிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டனா். அப்போது கைலாசநாதா் கோயில், அடிவார சித்தி விநாயகா் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பூஜைகள் செய்யப்பட்டு, சென்னிமலையை சுற்றி கிரிவலம் சென்றனா்.
சென்னிமலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மஹான்யாசம் மற்றும் பாராயணம் நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து யாக பூஜையும், முருகப் பெருமானுக்கு சப்த நதி தீா்த்த அபிஷேகமும் நடைபெறுகிறது.