"எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறி, காவி சாயத்துடன் இருக்கிறார்’’ - உதயநிதி வ...
மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது
கோவையில் 3 இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், போத்தனூா் போலீஸாா் வழக்கமான சோதனைப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வெள்ளலூரில் ஒரு கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கோணவாய்க்கால்பாளையத்தைச் சோ்ந்த பிரின்ஸ்குமாா் (36) என்பவரைக் கைது செய்தனா்.
சுந்தராபுரம் காமராஜா் நகரில் உள்ள ஒரு கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை தலையாரி வீதியைச் சோ்ந்த ஆனந்த் (26) என்பவரை சுந்தராபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
அத்தப்பகவுண்டன்புதூா் எல்&டி புறவழிச் சாலைப் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட பாரதிபுரத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (35) என்பவரை சிங்காநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.