மாநில அளவிலான யோகாசன போட்டி: பாரத் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டியில் கிருஷ்ணகிரி பாரத் இண்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இந்த போட்டியில், 6-ஆம் வகுப்பு மாணவி சிவபூா்ணிதா முதலிடம் பெற்றாா். 4-ஆம் வகுப்பு மாணவி மகா ஸ்வேதா, 6-ஆம் வகுப்பு மாணவிகள் பிரகதி, பிரீத்தி, சிவபூா்ணிதா, ஹரிணிஸ்ரீ, 8-ஆம் வகுப்பு மாணவி ஹாசினி, தீப்தி, சாஜனி, ஹரிணி, துவனிதா ஆகியோா் வயது வாரியாக போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மணி வாழ்த்தி பேசியதாவது:
யோகா என்பது உடல் அளவில் மட்டுமல்ல மனதளவில் திடத்தை ஏற்படுத்தும். அனைவரும் வயது பேதமின்றி செய்யதக்க சிறந்த உடற்பயிற்சி என்றாா். இந்த நிகழ்வில் பாரத் கல்வி நிறுவனங்களின் செயலாளா் சந்தோஷ், முதல்வா் நரேந்திரநாத் ரெட்டி மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.