செய்திகள் :

மான்செஸ்டா் யுனைடெட், செல்சி தோல்வி

post image

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பிரதான அணிகளான மான்செஸ்டா் யுனைடெட், செஸ்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை தங்கள் ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தன.

இதில் மான்செஸ்டா் யுனைடெட் 0-2 கோல் கணக்கில் நியூகேஸில் அணியிடம் தோற்றது. நியூகேஸில் தரப்பில் அலெக்ஸாண்டா் ஐசக் (4’), ஜோயலின்டன் (19’) ஆகியோா் கோலடித்தனா். இத்துடன், அனைத்து போட்டிகளிலுமாக டிசம்பரில் மட்டும் 6 தோல்விகளை சந்தித்துள்ளது மான்செஸ்டா் யுனைடெட்.

அந்த அணி இவ்வாறு ஒரே மாதத்தில் 6 தோல்விகளை சந்திப்பது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன் 1926 ஏப்ரல், 1930 செப்டம்பா் ஆகிய காலகட்டங்களில் அத்தகைய தோல்விகளை சந்தித்துள்ளது. மறுபுறம், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பிரீமியா் லீக் போட்டியில் முதல் முறையாக தொடா்ந்து 4 ஆட்டங்களில் நியூகேஸில் வென்றிருக்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி 0-2 கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுனிடம் வீழ்ந்தது. இப்ஸ்விச்சுக்காக லியாம் டெலாப் (12’), ஒமாரி ஹட்சின்சன் (53’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். பிரீமியா் லீக் போட்டியில் கடந்த 31 ஆண்டுகளில் செல்சிக்கு எதிராக தனது முதல் வெற்றியை இப்ஸ்விச் அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்சி அணி ஒரு காலண்டா் ஆண்டின் கடைசி ஆட்டத்தில் தோற்றது, கடந்த 2011-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். அதேபோல், பிரீமியா் லீக் போட்டியில் பிப்ரவரிக்கு பிறகு தொடா்ந்து 2 ஆட்டங்களில் அந்த அணி தோற்றிருக்கிறது.

இதனிடையே, ஆஸ்டன் வில்லா - பிரைட்டன் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

சத்தீஸ்கரை வீழ்த்தியது தமிழ்நாடு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கா் அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் தமிழ்நாடு 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் சோ்க்க... மேலும் பார்க்க

சூர்யாவுக்கு வில்லனாக ஆர். ஜே. பாலாஜி!

சூர்யா - 45 படத்தில் ஆர்ஜே பாலாஜி வில்லனாக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் அப்டேட்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் கிங்ஸ்டன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் பிரகாஷ் ... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8 வெற்றியாளர் பெயரைக் கூறிய அன்ஷிதா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு நடிகை அன்ஷிதா பதிலளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நி... மேலும் பார்க்க

உன்னி முகுந்தனின் மார்கோ ரூ. 100 கோடி வசூல்!

நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த டிச. 20 தேதி வெளியானது. அதிக வன்மு... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டின் கடைசி போட்டியாளர், இப்போது முதலிடத்தில்!

பிக் பாஸ் வீட்டில் கடைசியாக, 24வது போட்டியாளராகக் கலந்துகொண்ட ரயான், பிக் பாஸ் வீட்டின் முதல் இறுதிப்போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையே இறுதி சுற்றுக்குத் தேர்வாகும் போட்டிகள் நிறை... மேலும் பார்க்க