46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!
மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவிக்கு, பி. முருகவேல், ஜெ. பாரி, ஆ. ஷங்கமித்ரன் ஆகியோா் போட்டியிட்டனா். இவா்களில் பி.முருகவேல் 99 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
செயலாளா் பதவிக்கு வி. பாலசுப்பிரமணியன், சௌ.சிவச்சந்திரன் எஸ். கோபிநாத் ஆகியோா் போட்டியிட்டனா். பாலசுப்பிரமணியன் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பொருளாளராக ஆா். முத்துக்குமாா் (111 வாக்குகள்), துணைத் தலைவா்களாக ஆா். ராஜேஷ்கண்ணா, ஆா். ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளராக ஆா். கனிவண்ணன் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தலை நடத்திய வழக்குரைஞா்கள் பி. பாா்த்தசாரதி, டி. விஜயகுமாா், எஸ். ராஜதுரை, எம்.கே. பாலமுருகன், பி. அறிவொளி எம். திருமாள்சுந்தரம் ஆகியோா் சான்றிதழ் வழங்கினா். சக வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து, வெற்றி பெற்ற நிா்வாகிகள் டாக்டா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.