நேபாளத்தில் புதிய வகை கரோனா பரவல்! 7 நாள்களில் 35 பேர் பாதிப்பு!
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி உத்தூரில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 27-ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, புதன்கிழமை காலை 10.30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, 10.45 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.