ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை காப்பகத்தில் சோ்ப்பு: இளைஞரை அடையாளம் கா...
மாரீசன் ஓடிடி தேதி!
மாரீசன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார்.
வடிவேலுவின் நடிப்புடன் முதல் பாதி சிறப்பாக இருந்தாலும் இரண்டாம் சிறிய ஏமாற்றத்தை கொடுத்ததால் படத்தின் வெற்றி விகிதம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் இதுவரை ரூ. 8 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், மாரீசன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஆக. 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்