திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு
மாா்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவா் சிங்காரவேலா் நினைவு நாள் அனுசரிப்பு
பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவா் சிங்காரவேலா் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மூத்த தலைவா் சிங்காரவேலா் உருவ படத்துக்கு, மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினரும், விவசாய சங்க மாநில பொதுச் செயலருமான சாமி. நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாறு, இயக்கப் பணி குறித்து விளக்கிப் பேசினாா்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என். செல்லதுரை, எஸ். அகஸ்டின், ஏ. கலையரசி, ரெங்கநாதன், ராஜேந்திரன், சி. கருணாகரன், எழுத்தாளா் இரா. எட்வின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.