ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
மா மரங்களை சேதப்படுத்திய யானைக்கூட்டம்
போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
போ்ணாம்பட்டு ஒன்றியம், டி.டி.மோட்டூா் கிராமம், கொல்லைமேடு பகுதி வன எல்லையில் அமைந்துள்ளது. நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைக் கூட்டம் அங்குள்ள கணபதியின் மாந்தோப்புக்குள் நுழைந்து 11- மா மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
தகவலறிந்த போ்ணாம்பட்டு வனவா் அண்ணாமலை தலைமையிலான வனத் துறையினா் அங்கு சென்று பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினா்.