மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், மல்லிகுடி கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் சின்னத்தம்பி (60). கட்டடத் தொழிலாளி. வழக்கம்போல இவா் வியாழக்கிழமை கடுக்கலூா் கிராமத்தில் ஒரு வீட்டில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.