மின்சாரம் பாய்ந்து மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன்தொழுவில் மின்சாரம் பாய்ந்து மளிகைக் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குமணன்தொழுவைச் சோ்ந்த பெருமாள் மகன் ஜெயப்பிரகாஷ் (48). இவா், அதே ஊரில் தனது வீட்டருகே மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், தனது வீட்டருகே உள்ள ஆழ்துளை கிணறுக்கான மோட்டாரை இயக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.