செய்திகள் :

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை ரிவ்யூ செய்வது எப்படி? #Labham_Webinar

post image

ஹாய்! எப்படி இருக்கீங்க?

நீங்க மியூச்சுவல் ஃபண்டில்  முதலீடு செஞ்சுட்டு இருக்கீங்களா? இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் - விலைவாசி உயர்வைத் தாண்டி வளரும், மிகப்பெரிய ரிஸ்க் இல்லாத முதலீட்டு வழிகள்ல இதுவும் ஒன்னு. 'மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானது' என்ற வாசகத்தை தினசரி ஐபிஎல் விளம்பரங்கள்ல பார்க்குறோம்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

அப்படி விளம்பரத்தைப் பார்த்தோ, நாணயம் விகடன் படிச்சோ, யூட்யூப் பார்த்தோ, உங்களுடைய சுய ஆர்வத்தாலயோ நீங்க மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு பண்ணிட்டு இருப்பீங்க. வாழ்த்துகள். ஆனா...

உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் லாபம் தருதா?

ஐந்நூறு, ஆயிரம்னு மாதாமாதம் எஸ்.ஐ.பி போடுறப்போ நாம மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ரிட்டர்ன்ஸை பெருசா கண்டுக்க மாட்டோம். அதுவே ஒரு ஐம்பதாயிரம் தாண்டிட்டாலே, நம்முடைய போர்ட்ஃபோலியோவை அடிக்கடி பார்ப்போம். அது வளருதா இல்லை நஷ்டத்தில் இருக்கான்னு அப்பப்போ செக் பண்ணிப்போம். இப்படி செக் செய்வது மனித சுபாவம், பெரிய தவறில்லை. அடிக்கடி பார்க்கும் நீங்க, முக்கியமான விஷயங்களை பார்க்குறீங்களா?

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

முக்கியமா ஒரு முதலீடு என்பது நம்முடைய நிதி சார்ந்த இலக்குகளை அடைய உதவணும். வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது, பிள்ளைகளின் மேற்படிப்பு, ரிட்டைர்மென்ட் - இந்தமாதிரி... நிதி இலக்கு இல்லாம முதலீடு செய்வது என்பது எந்த இடத்துக்கு போறோம்னு தெரியாம பஸ்ஸுல ஏறி உக்கார்ற மாதிரி!

நீங்க இதுல எந்த ரகம்? 

உங்களுடைய இலக்குகள் உங்களுக்கு சரியா தெரியுமா? இல்ல நினைச்ச நேரமெல்லாம் நினைச்ச ஃபண்ட்களை வாங்குற ரகமா? இலக்குன்னு பெருசா ஒன்னும் இல்ல, ஆனா நிறைய செல்வம் சேர்க்கணும்னு நினைக்கிறவரா?ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நோக்கத்துடன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்து வர்றோம். ஆனா அதெல்லாம் சரியான பாதையில் பயணிக்குதான்னு எப்படி தெரிஞ்சுப்பது?

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

ஒரு தனி நபர் எத்தனை மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமில் முதலீடு செய்யலாம்? நீங்க பத்து ஃபண்டுகளுக்கு மேல வச்சுருந்தீங்கன்னா, அதை எப்படி நிர்வகிப்பது? உங்களின் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை எத்தனை நாளைக்கு ஒருமுறை சரி பார்க்கணும்? ஒரு ஃபண்டை எத்தனை வருஷம் வச்சுக்கலாம்? எப்போ பணத்தை வெளியே எடுக்கலாம்? இப்படி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கான அனைத்து விஷயங்களையும் அலசி ஆராயப் போறோம்.

லாபம் நடத்தும் போர்ட்ஃபோலியோ ரிவ்யூ வெபினார்


தலைப்பு: Portfolio Review செய்வது எப்படி?நாள்: மே 25, 2025, ஞாயிறுநேரம்: காலை 11 - 12.30 மணி பேச்சாளர்கள்: எஸ். ஸ்ரீதரன், நிறுவனர் & தலைமை அதிகாரி, வெல்த் லேடர் & ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.

ரெஜிஸ்டர் செய்ய:  https://forms.gle/4qvSL7cneWDrya8k9 

வெபினார்
வெபினார்

விகடன் லாபம் பற்றி:

இதுவரை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி நிறைய எழுதியும், பல்வேறு முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்த விகடன் மூலம் இனி நீங்க மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டை செய்ய முடியும்! விகடன் 'லாபம்' நிறுவனம் மூலம் ஒரு அக்கவுண்ட் துவங்கி இன்னைக்கே, சிம்பிளா நீங்க மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டை ஆரம்பிக்கலாம்!

லாபம் மூலம் எங்க, எப்படி, எவ்ளோ முதலீடு செய்யணும்னு தெரிஞ்சுக்கணுமா? உங்க நிதி இலக்குகள் பற்றி பேசணுமா? 96002 96001 என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க, எங்க நிபுணர்கள் 24-48 மணி நேரத்தில் உங்களை அழைப்பாங்க. வெப்சைட்: https://labham.money/

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

பொறுப்புத் துறப்பு: விகடன் வெல்த் பிரைவேட் லிமிடெட்/லாபம், AMFI அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமாகும் - ARN-310095. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பண(னி)ப்போர்! - எது சரி? எது தவறு? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

LIC: `இனி வாட்ஸ்அப் பாட் மூலம் பிரீமியம் செலுத்தலாம்' - புது வசதியை அறிமுகப்படுத்திய எல்ஐசி

'டிஜிட்டல் மாற்றம்' மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய டிஜிட்டல் முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) இன்று 'வாட்ஸ்அப் பாட் மூலம் பிரீமியம் செலுத்... மேலும் பார்க்க

கணவன் - மனைவி ரெண்டு பேருமே சம்பாதிக்கிறீங்க... ஆனாலும் பணம் பத்தி கவலையா? #LabhamWebinar

நீங்க சம்பாதிக்கிறீங்க. உங்க கணவன்/மனைவியும் சம்பாதிக்கிறாங்க. யோசிச்சு பார்த்தா, பொருளாதாரத்தை பொறுத்தவரை உங்க வாழ்க்கை ரொம்ப ஈஸியா போகுது. ஆனா இந்த நிலை எப்போதுமே நீடிக்குமா?ஒருத்தர் பண நிர்வாகம் பற... மேலும் பார்க்க

Labham: சிங்கப்பூர் & மலேசியாவில் வசிக்கிறீங்களா? உங்க வருங்காலம் பணக் கஷ்டம் இல்லாம இருக்கணுமா?

நீங்க இந்தியாவை விட்டுக் கிளம்பும்போது பெருங்கனவுகளோட அந்த ஃபிளைட்டில் ஏறி இருப்பீங்க! இப்போ அந்தக் கனவு பலிக்கவும் ஆர்மபிச்சு இருக்கும். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வாழும் நீங்க இப்போ நிம்மதியா இ... மேலும் பார்க்க

60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

கிட்டத்தட்ட 20 வருடங்களாநீங்க நல்லா உழைச்சாச்சு! கொஞ்சம் காசும் சேர்த்து வச்சுட்டீங்க. சிலர் வீடும்வாங்கியிருப்பீங்க, அதுக்கு சிலர் இ.எம்.ஐ-யும் கட்டிட்டு இருப்பீங்க. ஒருபக்கம்குழந்தைகளின் படிப்பும்போ... மேலும் பார்க்க

கைநிறைய சம்பாதிக்கிறீங்களா? 40 வயதில் ரிட்டையர் ஆகி நீங்க நெனச்ச மாதிரி வாழணுமா?

நீங்க 30 வயசுலேயே ஒரு லட்ச ரூபாய்க்கும்மேலசம்பளம் வாங்குபவரா? வாழ்த்துகள். இது உங்கதிறமைக்கும்உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம். வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு இல்லையா? இப்போதான்நீங்க சில முக்கியமான... மேலும் பார்க்க