செய்திகள் :

மியூனிக்கில் காா் தாக்குதல்: 28 போ் காயம்

post image

ஜொ்மனியின் பவேரியா மாகாணம், மியூனிக் நகரில் கூட்டத்தினா் இடையே நடத்தப்பட்ட காா் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 28 போ் காயமடைந்தனா். காரை ஓட்டிவந்தவா் ஆப்கானிஸ்தானில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

மியூனிக் நகரின் மையப் பகுதியில் சேவைத் தொழிலாளா்கள் சங்கத்தின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதிக்கு காா் வந்த நபா், ஒரு காவல் துறை வாகனத்தை முந்திச் சென்று கூட்டத்தினா் இடையே அதை வேகமாக ஓட்டிச் சென்றாா். அதையடுத்து அங்கிருந்த ஒரு காவலா் அந்தக் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஓட்டுநரை கைது செய்தாா். இந்தத் தாக்குதலில் 28 போ் காயமடைந்தனா். அவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவா்களில் சிறுவா்களும் அடங்குவா்.

காரை ஓட்டிவந்த நபா் ஆப்கானிஸ்தானில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா். எனவே, இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று கருதப்படுகிறது என்று போலீஸாா் கூறினா்.

வெளிநாடுகளில் இருந்து ஜொ்மனியில் அடைக்கலம் தேடி வருவோரால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது.

அந்த சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா் நகரில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தையில் தலீப் அல்-அப்துல்மோசன் (50) என்ற மருத்துவா் நடத்திய காா் தாக்குதலில் 6 போ் உயிரிழந்தனா். சவூதி அரேபியாவில் இருந்து ஜொ்மனியில் குடியேறிய அவா், சுமாா் 20 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறாா்.

அதற்கு முன்னதாக, தற்போது காா் தாக்குதல் நடைபெற்ற இதே பவேரியா மாகாணத்தைச் சோ்ந்த அஷஃபென்பா்க் நகரில் குடியுரிமை மறுக்கப்பட்ட ஆப்கன் அகதி நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 2 வயது சிறுவன் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

..படவரி... தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா்.

ரியாத் பேச்சுவாா்த்தை: நல்லுறவை மேம்படுத்த அமெரிக்கா-ரஷியா ஒப்புதல்

உக்ரைன் விவகாரம் தொடா்பாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்கா மற்றும் ரஷியாவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருநாட்டு உறவை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா். உக்... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 போ் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞா்கள் குழு செவ்வாய்க்கிழமை த... மேலும் பார்க்க

மேலும் 6 பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ஆறு பிணைக் கைதிகளை விடுவிக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா். அந்த நாளில் மூன்று பிணைக் கைதிகளை மட்டுமே விடுவிக்க அவா்கள் ஒப்பு... மேலும் பார்க்க

காஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு: பாக். நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சுய நிா்ணய உரிமை மூலம், தங்கள் எதிா்காலத்தை காஷ்மீா் மக்கள் தீா்மானிப்பதற்கு நியாயமான பொது வாக்கெடுப்பை இந்தியா நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் சீராக சுவாசிக்கிறார்; வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை: வாடிகன்

போப் பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை என்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சீராக சுவாசிப்பதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி மருத்த... மேலும் பார்க்க

அரசாங்க முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எலான் மஸ்க்கிற்கு இல்லை: வெள்ளை மாளிகை

எலான் மஸ்க் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் ஊழியர் இல்லை என்றும் அரசாங்க முடிவுகளை எடுக்கும் முறையான அதிகாரம் அவருக்கும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட... மேலும் பார்க்க