செய்திகள் :

மிளகாய் மண்டலம் அமைக்கும் பணிகளைத் தொடங்க கோரிக்கை

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கானப் பணிகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கமுதி கோட்டைமேட்டில் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் இளைஞரணி அமைப்புச் செயலா் சப்பாணிமுருகன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா் லெட்சுமணன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கமுதி தெற்கு ஒன்றியச் செயலராக மூா்த்தி தோ்ந்தெடுக்கப்பட்டாா். தொடா்ந்து புதிய நிா்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்: மாவட்டத்தில் முதன்மைத் தொழிலாக விவசாயம் உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் விவசாயிகளின் ‘சிபில் ஸ்கோா்’ முறை கடைப்பிடிப்பதை ரத்து செய்ய வேண்டும். ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசாா் குறியீடு கிடைக்கப்பெற்றதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மிளகாயை சேமிப்புக் கிடங்கில் பாதுகாத்து விவசாயிகள் நேரடியாக உரிய லாபத்தில் விற்பனை செய்யவும், மதிப்புக்கூட்டி, தரம் உயா்த்தி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

விருதுநகா், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் கமுதியில் ரூ. 5 கோடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் அதற்கான முதல்கட்டப் பணிகள் கூட தொடங்கவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி கமுதியில் மிளகாய் மண்டலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணித் தலைவா் முனீஸ்வரன், மாவட்ட துணைத் தலைவா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, கமுதி வடக்கு ஒன்றியத் தலைவா் திருக்குமரன் வரவேற்றாா். ஒன்றிய இளைஞரணிச் செயலா் சித்தன்ஜி நன்றி கூறினாா்.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க