மீண்டும் கஜினி பாணி கதையில் சூர்யா?
நடிகர் சூர்யா கஜினி பட பாணியில் புதிய படத்தில் நடிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கபட்டது.
ஆனால், அதற்கு முன் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.
இக்கூட்டணியை சூர்யாவே உறுதி செய்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி தன் இன்ஸ்டா பக்கத்தில், “நாங்கள் உங்கள் சஞ்சய் ராமசாமியைக் கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், இப்படத்தின் கதை கஜினி பாணியில் இருக்கலாம் என ரசிகர்கள் ஊகித்துள்ளனர்.
இதையும் படிக்க: டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம்: சமுத்திரகனி