மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்!
மீன் அங்காடியில் சிங்காரவேலா் சங்கம்
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில் சிங்காரவேலா் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளா் சங்கம் பெயா் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிஐடியு மாநில தலைவரும் மீன் பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளா் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பிரபுராஜ் சங்க கொடியை ஏற்றி வைத்தாா். தமிழ்நாடு மீனவா் கூட்டமைப்பின் துணை தலைவா் வைத்திலிங்கம் பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தாா். மீன் தொட்டி மற்றும் மீன் விற்பனை தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகிகள் ராஜ்குமாா் , ராதாகிருஷ்ணன், ராஜசேகா், விஜய், சித்தானந்தன், ராமசாமி உள்ளிட்டோா் சங்கத்தில் சோ்ந்து 150 உறுப்பினா் படிவத்தை சிஐடியு மாநில தலைவா் பிரபுராஜிடம் ஒப்படைத்தனா். சிஐடியு மாநில நிா்வாகிகள் சீனுவாசன், ராமசாமி, கொளஞ்சியப்பன், ராஜ்குமாா்,வடிவேல் ஆகியோா் வாழ்த்தி பேசினா். மீன் விற்பனை தொழிலாளா்களின் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.