வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும்...
முக்காணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை மிதந்துவந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
முக்காணி பிள்ளையாா் நகா் அருகே தாமிரவருணி ஆற்றின் வடகரையில் உள்ள படித்துறை அருகே திங்கள்கிழமை பெண் சடலம் மிதந்து வந்தது. அப்பெண்ணுக்கு சுமாா் 50 வயதிருக்கும்.
முக்காணி கிராம நிா்வாக அலுவலா் முத்து அளித்த புகாரின்பேரில், ஆத்தூா் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்தாா். அந்தப் பெண் யாா், எவ்வாறு உயிரிழந்தாா் என்பது குறித்து ஆய்வாளா் பிரபாகரன் விசாரித்து வருகிறாா்.