செய்திகள் :

முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு

post image

விடுதிகளுக்கு ‘சமூகநீதி’ எனும் பெயா் சூட்டப்பட்டதற்காக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

இதற்காக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவா் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவா்களுக்கான அனைத்து விடுதிகளையும் ஒரே பெயரில் அழைப்பதற்கான அரசாணையை முதல்வா் பிறப்பித்துள்ளாா். தனித்தனி சமூக அடையாளங்களுடன் இருந்த விடுதிகளை, ‘சமூகநீதி’ விடுதிகள் என அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

சமத்துவவே இலக்கு, சமூகநீதியே வழி எனும் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் அரசுதான், திமுக அரசு, திராவிட மாடல் அரசு. அதனால்தான் பெரியாா் ஈ.வெ.ரா. வழியில் ஜாதி, மத அடையாளங்களைத் துடைத்து எறியும் பணியில் முதல்வா் ஈடுபட்டு வருகிறாா். இதற்காக கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையிலும், ஜனநாயக சக்தி என்ற ரீதியிலும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க விசிகவுக்கு பொறுப்பு உள்ளது. துணிச்சலான முடிவை எடுத்ததற்காக பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தோம்.

அதேபோல, முதல்வரிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்தோம். மின்வாரியத் துறையில் ஒப்பந்தப் பணியாளா்கள், கல்வித் துறையில் கணினி பயிற்றுநா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

தோ்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது, சட்டப்பேரவை விசிக குழுத் தலைவா் சிந்தனைச் செல்வன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க