தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும...
முதல்வா் இன்று சேலம் வருகை: ட்ரோன்கள் பறக்க தடை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சேலம் வருவதையொட்டி ஆக.16, 17 ஆகிய இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகிறாா். தொடா்ந்து 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு சேலம் வழியாக சென்னை செல்கிறாா். இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் வரும் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.