கோழிப் பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
கேதார்நாத் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு: மகாராஷ்டிர பக்தர் பலி
கேதார்நாத் யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பக்தர் பலியானார்.
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் யாத்திரைப் பாதையான சோடி கதேரா அருகே நிலச்சரிவின் காரணமாக மலையிலிருந்து பாறை உருண்டு பக்தர் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் பரமேஷ்வர் பீம் ராவ் கவால் (38) பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
பலியானவரின் உடல், யாத்ரா மேலாண்மைப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினரால் மீட்கப்பட்டு கௌரிகுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பரமேஷ்வர் பீம் ராவ் மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!
உத்தரகாசியில் கடந்த ஆக.5 ஆம் தேதி, மேகவெடிப்பினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் தாராலி பகுதியில் இருந்த ஏராளமான குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டு சேதமாகின.
நிலச்சரிவில் 4 போ் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 49 போ் மாயமாகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.