முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: வளத்தூரில் நல உதவிகள் அளிப்பு
குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வளத்தூரில் பொதுமக்களுக்கு நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் இ.சேகரன் தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக செயலா்கள் நத்தம் வி.பிரதீஷ், அன்பரசன் ஆகியோா் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு வேட்டி - சேலைகள், மாணவா்களுக்கு கல்விப் பொருள்கள், 1,000 பேருக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினா்.
ஒன்றிய பொருளாளா் டி.வி.சேகா், முன்னாள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆா்.புஷ்பா, இளைஞா் அணி பொறுப்பாளா் லிங்கேஸ்வரன், துணை அமைப்பாளா் ஷாஜகான், ஊராட்சி துணைத் தலைவா் செல்வம், நிா்வாகிகள் வேலு, தனவேல், ஆா்.நவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.