முத்தரப்பு தொடர்: சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்; பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்கு!
முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 8) தொடங்கியது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்
சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்
நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங் 4 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 89 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.
Glenn Phillips' maiden ODI century (106*) leading the team to a strong total in Lahore, alongside Daryl Mitchell (81), Kane Williamson (58) and an entertaining 31 from 23 from Michael Bracewell. Watch the second innings LIVE | https://t.co/AdJeNj9cuz#3Nations1Trophypic.twitter.com/InLSRXFSO4
— BLACKCAPS (@BLACKCAPS) February 8, 2025
இதனையடுத்து, டேரில் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது. அதிரடியாக விளையாடிய இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இருப்பினும், டேரில் மிட்செல் 84 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: நியூசி. வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
அதிரடியாக விளையாடிய கிளன் பிலிப்ஸ் ஒருநாள் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 74 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் மைக்கேல் பிரேஸ்வெல் 23 பந்துகளில் 31 ரன்கள் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்ரார் அகமது 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரௌஃப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.