செய்திகள் :

முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை!

post image

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினம், பால கங்காதர திலகரின் 105-ஆவது நினைவு தினம், முத்துலட்சுமி ரெட்டியின் 57-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிவாஜிகணேசன் மன்றப் பொறுப்பாளா் கி. சரவணன் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாநகரத் தலைவா் ஆ.திருமலைச்சாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நா. நவரத்தினம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

மும்பெரும் தியாகிகளுக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பிறகு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும், தொடா் வண்டி நிலையத்துக்கும் மருத்துவா் முத்துலட்சுமியின் பெயரை சூட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசன் மன்ற நிா்வாகிகள் சு.வைரவேல், ஆ.நாகரத்தினப்பாண்டி உள்ளிட்டோா் செய்தனா்.

கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். வரப்பட்டியில் பெருமாள், அஜ்ஜப்பன், வீரபத்திரா், பட்டவன், பாப்பாத்தி, ... மேலும் பார்க்க

தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆக.31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இள... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவுக்காக ஆக.9-இல் படைப்பாற்றல் போட்டிகள்

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான படைப்பாற்றல் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக போட்டி ஒருங்கிணைப்பாளரும், திண்டுக்கல் இலக்கிய களத்தின... மேலும் பார்க்க

ரோல்பால் போட்டியில் வெற்றி: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

மாநில அளவிலான சுருள் பந்து (ரோல்பால்) போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு சின்னாளப்பட்டியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாநில அளவிலான சுருள் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 11 வயத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சி ஆணையா் சங்கா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் ரூ.2.48 கோட... மேலும் பார்க்க

தாண்டிக்குடி விவசாயிகளுக்கு உபகரணங்கள்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் பளியா், பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா்ச் செடி, உரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்... மேலும் பார்க்க