மூதாட்டி தற்கொலை
மதுரையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை அண்ணாநகா் வீர வாஞ்சி தெரு அன்பு நகரைச் சோ்ந்த அழகு மனைவி மீனாம்பாள் (72). இவரது கணவா் அழகு இறந்து விட்ட நிலையில், உறவினரின் பராமரிப்பில் இருந்து வந்தாா். இந்த நிலையில், அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்த மீனாம்பாள் வீட்டில் வெள்ளிக்கிழமை பிளேடு மூலம் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.
உறவினா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.