செய்திகள் :

"மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் சண்டை வராது" - ஜான்வி கபூர் சொல்லும் லாஜிக்

post image
மறைந்த நடிகை ஶ்ரீதேவி - போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

2018ம் ஆண்டு `Dhadak' திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், சாதி குறித்து அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும், முரண்களையும் அறிந்துகொள்ளவதில் ஆர்வமிருப்பதாகவும், வரலாற்றை அறிந்து கொள்வதில் தனக்கு ஆர்வம் அதிகமிருப்பதாகவும் கூறியது பேசுபொருளாகியது.

ஜான்வி கபூர்

தற்போது ஜான்வி கபூர் நடித்திருக்கும் 'param sundari' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்துப் பேசியிருக்கும் ஜான்வி கபூர், "எனக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசையிருக்கிறது. அதற்குக் காரணம் 3 என்னோட லக்கி நம்பர். இரண்டாவது காரணம், இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள்.

மூன்றாவதாக ஒரு குழந்தை இருந்தால் அவர்களை சண்டைபோடாமால் பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். இரண்டு குழந்தைகளுக்கும் நடுவில் சமாதனம் பேசவும், இருவருக்கும் ஆதரவாக இருக்க அது உதவியாக இருக்கும். அதனால் மூன்று குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நிறையமுறை எனக்குள் தோன்றியிருக்கிறது" என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Sunny Leone: `குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை; கடவுள் வெறுப்பதாக நினைத்தேன்’ - சன்னி லியோன்

பிரபல நடிகையாக இருந்த நடிகை சன்னி லியோன், திரைத்துறையிலிருந்து சற்று விலகி, தனது குடும்ப வாழ்வில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.பஞ்சாபி குடும்பத... மேலும் பார்க்க

`மீண்டும் Leh-வில் சிக்கிக் கொண்டேன்; ஒரு விமானமும் இல்லை...' - லடாக்கில் நடிகர் மாதவன்

நடிகர் ஆர்.மாதவன் படப்பிடிப்புக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில் இருக்கும் லே என்ற இடத்துக்குச் சென்று இருந்தார். அங்கு தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்து தடை... மேலும் பார்க்க

``நல்ல கன்டென்ட் உள்ள படைப்புகளுக்கு நெட்ஃப்ளிக்ஸ் முக்கியத்துவம் தருவதில்லை'' – அனுராக் காஷ்யப்

"நல்ல உள்ளடக்கம் கொண்ட படைப்புகளுக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை" என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார்.இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரா... மேலும் பார்க்க

``விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே வந்தோம்'' - மனைவியுடன் வந்த நடிகர் கோவிந்தா

கோவிந்தா - சுனிதா பத்திரிகையாளர் சந்திப்புபாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது மனைவி சுனிதா அஹுஜாவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவியது. சுனிதா அஹுஜா விவாகரத்து கேட்டு மும்பை குடும்பநல நீதி... மேலும் பார்க்க

"ஆமாம், என் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது" - மனம் திறந்த சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் இடையிலான நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், ச... மேலும் பார்க்க

Deepika Padukone: சமூக வலைத்தளத்தில் மகளின் படம்; ரகசியமாக வீடியோ எடுத்தவருடன் தீபிகா வாக்குவாதம்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து அக்குழந்தையை வெளியுலகிற்குக் காட்டாமல் தீபிகா படுகோனே வளர்த்து வருகிறார். கு... மேலும் பார்க்க