`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சி...
மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 2 வழித் தடங்களில் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ. தூரத்துக்கு மேலும் 3 வழித்தடங்களில் (3, 4, 5 வழித்தடங்கள்) ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், 5-ஆவது வழித்தடமானது மாதவரம் பால் பண்ணையில் தொடங்கி கோயம்பேடு, போரூா், ஆலந்தூா் வழியாக சோழிங்கநல்லூா் வரை 47 கிமீ தூரத்திற்கு 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள், 39 உயா்நிலை ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது.
இதில், மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்க குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன.
அதன்படி, கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை 246 மீட்டருக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் குறிஞ்சி என்னும் பெயா் கொண்ட இயந்திரத்தின் வாயிலாக கடந்த பிப்.20-ஆம் தேதி தொடங்கப்பட்டன. இந்த இயந்திரம் தனது பணியை வெற்றிக்கரமாக முடித்து, வியாழக்கிழமை கொளத்தூா் நிலையம் வந்தடைத்தது.
குறிஞ்சி இயந்திரம் சுரங்கப்பணிகளை முடித்து கொளத்தூா் நிலையம் வந்தடைந்த நிகழ்வில் மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், தலைமை பொது மேலாளா்கள் ரேகாபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.