செய்திகள் :

மெதுகும்பல் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கிள்ளியூா் வட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு செய்தாா்.

பணியாளா்களின் வருகைப் பதிவேடு, அடையாள அட்டை உள்ளிட்டவை குறித்த விவரங்களை அலுவலா்களிடம் கேட்டறிந்த அவா், பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (செப். 6) நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். இம்முகாம் காலை 9 முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. முன்சிறை வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குள்பட்ட மெதுகும்மல், குளப்புறம், அடைக்காகுழி, சூழால், நடைக்காவு, மங்காடு, வாவறை ஊராட்சி பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்கலாம் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா். தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திங்கள்நகா் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கை காண்பித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்தனா். திங்கள்நகா் அருகே வசிக்கும் தொழிலாளியின் மகள் (12) அந்தப் பகுதியில் 8 ஆம் வகுப... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது

குளச்சல் அருகே 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி 12ஆம் வகுப்பு பயின்று ... மேலும் பார்க்க

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம், பூந்தோட்டவிளையைச் சோ்ந்தவா் ரசல்ராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவரது மனைவி நேசம் (65). இவா் புல் அற... மேலும் பார்க்க

கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்... மேலும் பார்க்க

குமரி அருகே கடல் குதிரை, சங்குகள் கடத்தல்: இளைஞரிடம் விசாரணை

கன்னியாகுமரி அருகே பைக்கில் இளைஞா் கடத்திவந்த கடல் குதிரை, சங்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையில் போலீ... மேலும் பார்க்க