செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

post image

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,750 கன அடியிலிருந்து வினாடிக்கு 56,996 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக திங்கள்கிழமை மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,750 கன அடியிலிருந்து வினாடிக்கு 56,996 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300 கன அடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 18,700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

The water inflow into Mettur Dam has increased from 40,750 cubic feet per second to 56,996 feet.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை சுமார் 6 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட... மேலும் பார்க்க

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

வாழப்பாடி: பேளூரில் மாரியம்மன் கோயில் ஊர்வலத்தின் போது கண்ணனூர் நகர் பகுதி இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணனூர் நகர் பகுதி மக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியல் ஈடுபட்டதால் பரப... மேலும் பார்க்க

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், "நீ அரியணை ஏறும் நாள் வரும்" என விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.2026 சட்டப்பேரவை... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

புது தில்லி: தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது. யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெள... மேலும் பார்க்க

ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 254 ஆவது நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி்சாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்திய சுதந்தி... மேலும் பார்க்க

தில்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தில்லியில் உள்ள 32 பள்... மேலும் பார்க்க