தினமும் கணவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் மனைவி - என்ன காரணம் கூறுகிற...
மேற்கூரையிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே பணியின் போது மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பழையபேட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் முருகேசன்(37). வெல்டிங் தொழிலாளியான இவா், பெருமாள்புரம் அருகே உள்ள கிடங்கு ஒன்றில் இரும்பு தகடுகளால் மேற்கூரை அமைக்கும் பணி செய்த போது தவறி கீழே விழுந்தாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பெருமாள்புரம் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
விவசாயி உயிரிழப்பு: மேலப்பாளையம் குறிச்சி சாந்தமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் பரணிராஜா உடையாா்(64). விவசாயியான இவா், கடந்த 20-ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் படுகாயமடைந்தாராம்.
தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தாா். பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.