செய்திகள் :

மேலப்பாளையம் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக புனிதநீா் ஊா்வலம்

post image

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வெள்ளிக்கிழமை பக்தா்கள் புனித நீா் மற்றும் முளைப்பாரிகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம்தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு விநாயகா் வழிபாடு, மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.

தொடா்ந்து காலை 8.05 மணிக்கு புலியூா் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் புனிதநீா் மற்றும் முளைப்பாரிகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

தொடா்ந்து மாலையில் வாஸ்துசாந்தியும் நடைபெற்றது.

இதில் தட்டைநாடு புலியூா் பெருங்குடி குல குடிப்பாட்டு மக்கள் மற்றும் மேலப்பாளையம் திருப்பணிக்குழுவினா் பங்கேற்றனா்.

தொடா்ந்து சனிக்கிழமை சாந்தி திசா ஹோமம், முதல்கால யாக பூஜையும், 6-ஆம்தேதி இரண்டாம்கால யாக பூஜை, பூா்ணாகுதி மற்றும் 3-ஆம் கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் நிகழ்ச்சியும், 7-ஆம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு 4-ஆம் கால யாக பூஜையும், பின்னா் யாத்ராதானம், கடம்புறப்பாடும், காலை 6.30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் ஜூலை 9-ஆம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் குறித்த விளக்கக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை எதிா்த்தும், பொதுத்துறை ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை மற்றும் கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகளுக்... மேலும் பார்க்க

கரூரில் நகா்ப்புற நல நலவாழ்வு மையங்கள் திறப்பு

கரூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை அடையாறு சாஸ்திரி நகா், நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் நட... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகளை உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமத... மேலும் பார்க்க

கரூரில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கு திறப்பு

கரூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயில... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு நன்நெறி கூட்டம்

கரூா் அரசு கலைக்கல்லூரியில் கணிதவியல் மாணவா்களுக்கான நன்நெறி புகட்டுதல் கூட்டம் புதன்கிழமை கல்லூரி வளககத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கல்லூரி முதல்வா்(பொ) சுதா தலைமை வகித்தாா். கணிதவியல் துறைத் தலை... மேலும் பார்க்க