இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகத்துக்கு, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 1978-இல் பிஏ பட்டப்படிப்பை பிரதமர் மோடி நிறைவு செய்தார். அந்த ஆண்டில் பிஏ தோ்வு எழுதிய அனைத்து மாணவர்களின் விவரங்களையும் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ் வழங்க தில்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக் கோரி மத்திய தகவல் ஆணையத்தில் (சிஐசி) நீரஜ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அதனடிப்படையில், அவர் கோரிய விவரங்களை வழங்க தில்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீது நீதிபதி சச்சின் தத்தா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஒரு பல்கலைக்கழகமாக எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை. ஆண்டுவாரியான பதிவுகள் எங்களிடம் உள்ளன. 1978-ஆம் ஆண்டில் பெறப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ் விவரங்களும் உள்ளன. பிரதமர் மோடியின் சான்றிதழ் விவரங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்க எந்த ஆட்சேபமும் இல்லை. அதேநேரம், ஆர்டிஐ சட்டத்தின்கீழ் முகம் தெரியாத நபர்களிடம் வழங்க முடியாது.
சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் செயல்படும் நபா்களால் ஆர்டிஐ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கான உரிமையைவிட தன்மறைப்பு நிலைக்கான உரிமை மேலானது. எனவே, சிஐசி-யின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சிஐசி-யின் உத்தரவை அனுமதித்தால், ஆர்டிஐ மனுக்களின்கீழ் தில்லி பல்கலைக்கழகத்தின் ஏராளமான மாணவர்களின் விவரங்களையும் வெளியிட வேண்டிய நிலை வரும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய மத்திய தகவல் ஆணையத்துக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையும் படிக்க: காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியது! 117 பேர் குழந்தைகள்!!