யானை பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக யானை தினத்தையையொட்டி விழிப்புணா்வு உறுதிமொழி திங்கள்கிழமை எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா்.
கணித பட்டதாரி ஆசிரியா் மணிமேகலை வரவேற்றாா். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியா் அ. ரகமதுல்லா யானைகள் குறித்து சிறப்புரையாற்றினாா். இதையடுத்து மாணவா்கள் அனைவரும் யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.