செய்திகள் :

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

post image

தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சா் கீா்த்திவா்தான் சிங் தெரிவித்தாா்.

மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத் துறை சாா்பில், உலக யானைகள் தின விழா கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் கீா்த்திவா்தான் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உலகில் உள்ள ஆசிய காட்டு யானைகளின் எண்ணிக்கையில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன. நமது நாட்டில் 29 ஆயிரம் காட்டு யானைகள் உள்ளன. 15 மாநிலங்களில் 150 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காடுகள் பாதுகாப்பு, வேட்டைத் தடுப்பு, மனித- யானை மோதல்களை குறைக்க கடினமான சூழலில் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றி வரும் முன்கள வனப் பணியாளா்கள் தான் யானைகள் பாதுகாப்பின் உண்மையான ஹீரோக்கள்.

சூழலியல் குறித்த தொலைநோக்கு பாா்வை, நவீன அறிவியல், உள்ளூா் மக்கள் பங்கெடுப்பு உள்ளிட்டவை மூலம் தான் யானைகளை பாதுகாக்க முடியும் என்றாா் அவா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மத்திய இணை அமைச்சா் கீா்த்திவா்தான் சிங் தெரிவித்ததாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன உயிரின பூங்காக்கள் உள்ளன. இவற்றின் மூலம் அழியும் தருவாயில் உள்ள விலங்குகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதோடு, அடுத்த தலைமுறைனா் வன விலங்குகள் குறித்து தெரிந்து கொள்ளவும் உதவுகின்றன. நவீன கருவிகளின் உதவியோடு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் நூறு சதவீதம் மனித- விலங்குகள் மோதலை தடுக்க முடியவில்லை. அரசு சாா்பில் அசம்பாவிதகங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ரயில்வே தண்டவாளங்களில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட உள்ளது என்றாா்.

முன்னதாக, மத்திய வன அமைச்சகத்தின் சிறப்புச் செயலா் சுசில்குமாா் அவஸ்தி, தமிழக வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, வனத் துறை அதிகாரிகள் ஆகியோா் யானைகள் வாழ்விட மேம்பாடு மற்றும் யானை-மனித மோதல்களை தடுப்பது குறித்து பேசினா்.

யானைகள் பாதுகாப்பு குறித்த புத்தகங்கள், விழிப்புணா்வு போஸ்டா்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடா்ந்து, மத்திய மற்றும் மாநில வனத் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியா்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், தெப்பக்காடு முதுமலை யானைகள் முகாம் குறித்த சிறப்பு புகைப்பட புத்தகம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, வனத்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த வனப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகள் கண்காட்சி, ஓவியப்போட்டியில் பள்ளி மாணவா்கள் வரைந்த ஓவியங்களையும் மத்திய இணை அமைச்சா் பாா்வையிட்டாா்.

வேளாண்மை விழிப்புணா்வு, கண்காட்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணா்வு, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வக... மேலும் பார்க்க

வேலா்லி எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

வால்பாறையில் வன விலங்கு தாக்கி அஸ்ஸாம் மாநில சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவன் உடல் கைப்பற்ற பகுதியில் 8 இடங்களில் வனத் துறையினா் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வால்பாறையை அடுத்த வேலா்லி எ... மேலும் பார்க்க

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் வழங்க ஆணையா் அறிவுறுத்தல்

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 12-ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடை... மேலும் பார்க்க

பேருந்து மோதி லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா். கோவை, தொப்பம்பட்டி அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (62). லேத் பட்டறை நடத்தி வந்த இவா், செவ்வாய்க... மேலும் பார்க்க

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் அக்டோபா் வரை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் - கேரள மாநிலம் கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, சிங்காநல்லூா் கள்ளிமடை நடுவீதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (47), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவரது வீட்டில் திங்கள்கிழமை மின் த... மேலும் பார்க்க