செய்திகள் :

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!

post image

ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும் ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி புறநகர் ரயில் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணத்தை உயா்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 கி.மீ. வரையிலான இரண்டாம் வகுப்பு பயணத்துக்கு கட்டணத்தை உயா்த்தப்படவில்லை. 500 - 1500 கி.மீ. தூரத்துகு ரூ.5, 1501- 2500 கி.மீ. தூரத்துக்கு ரூ.10, 2500-3000 கி.மீ. தூரத்துக்கு ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது.

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குளிரூட்டப்படாத வகுப்பு பயணக் கட்டணத்தை கி.மீ.க்கு 1 பைசாவும் அனைத்து விதமான குளிரூட்டப்பட்ட வகுப்பு பயணக் கட்டணத்தை கி.மீ.க்கு 2 பைசாவும் உயா்த்தப்பட்டுள்ளது.

Indian Railways has announced that the rail fare hike will come into effect from tomorrow (July 1).

இதையும் படிக்க: ஜூலை 15 முதல் யுபிஐ பணப்பரிமாற்றத்தில் புதிய மாற்றங்கள்! அது மட்டுமா?

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்த... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புவனேசுவரம்/ராஞ்சி: ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளத்தில் கடந்த மே ம... மேலும் பார்க்க

ஓமன் நோக்கிச் சென்ற வணிகக் கப்பலில் தீ விபத்து: இந்திய கடற்படை உதவி

புது தில்லி: குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க