செய்திகள் :

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

post image

நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் “ப்ரோ கோட்” திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” -ன் அறிமுக விழா நேற்று (ஆக.26) பல முன்னணி பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படமான “ப்ரோ கோட்”-ன் முன்னோட்ட விடியோவை படக்குழு இன்று (ஆக.27) வெளியிட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும், இந்தப் புதிய படத்தில் நடிகர்கள் ரவி மோகன், எஸ் ஜே சூர்யா, மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன் மற்றும் நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், கௌரி பிரியா, மாளவிகா மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திருமண வாழ்வில், மனைவிகளால் கொடுமைகள் அனுபவிக்கும் கணவன்களைக் குறித்த கதைகளத்துடன் கூடிய நகைச்சுவை படமாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, தனது தயாரிப்பில் விரைவில் இரண்டு படங்கள் வெளியாகும் என நடிகர் ரவி மோகன் அறிவித்திருந்தார். அதில், இரண்டாவது படமான “அன் ஆர்டினரி மேன்” (An Ordinary Man) எனும் படத்தை தானே இயக்குவதாகவும் அவர் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

The team has released a preview video of the film “Bro Code”, produced by actor Ravi Mohan.

ஸ்வெரெவ், கௌஃப் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளா்களான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.ஆடவா்... மேலும் பார்க்க

வெள்ளி வென்றாா் அனிஷ் பன்வாலா

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா்.25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் அவா், 35 புள்ளிகளுடன் 2-... மேலும் பார்க்க

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தாா். இதர லீக் போட்டிகளை பரிசீலிக்கப்போவதாக அவா் தெரிவித்திருக்கிறாா்.கடந்த ஆ... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோா் தங்களது ஆட்டங்களை புதன்கிழமை டிரா செய்தனா்.இதில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா - அ... மேலும் பார்க்க

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை அதற்கு ஒப்புதல் வழங்கியது. போட்டிகள... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்... மேலும் பார்க்க