செய்திகள் :

ராகுல் காந்திக்கு ஜாமீன்: அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

post image

லக்னௌ: ராணுவ வீரர்களைப் புண்படுத்தும் விதத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் மக்களவை எதிர்ர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலுக்கு முன், 2022-இல் பாரத் ஜோடோ யாத்திரையில் நடைப்பயணம் மேற்கோண்ட ராகுல் காந்தி, அப்போது இந்திய ராணுவ வீரர்களைப் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது புகாரளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராக செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) ராகுல் காந்தி லக்னௌவிலுள்ள எம்.பி. எம்.எல்.ஏ.வுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கின் விசாரணையில், அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, தன் மீதான அவதூறு வழக்குகள் பற்றி செய்தியாளர்களுடன் கடந்த காலங்களில் பேசிய ராகுல் காந்தி, ‘பாஜக தரப்பிலிருந்து என் மீது 30 - 32 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவையனைத்தும் எனக்கு பதக்கங்கள் போன்றவையே’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Rahul Gandhi made an appearance in a defamation case filed over his purported remarks on Army personnel - the Court released him on bail

நூலிழையில் விபத்திலிருந்து தப்பிய இண்டிகோ விமானம்!

பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது நூலிழையில் விபத்திலிருந்து தப்பியுள்ளது. நேற்றிரவு தில்லியில் இருந்து பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ விமா... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 5 பேர் மீட்பு

ஹைதராபாத்தில் இன்று அதிகாலை குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.மொகல்புராவில் உள்ள ஐஜாஸ் குடியிருப்பின், பிளாட் எண் 201இல் உள்ள மேல் மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் சிஆர்பிஎஃப் வீரர், 2 மாவோயிஸ்ட்டுகள் கொலை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர், இரண்டு மாவோயிஸ்ட்டுகள் புதன்கிழமை காலை கொல்லப்பட்டனர்.ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டம், கோமியா காவல் நிலையத்துக்குள்பட்ட பிர்ஹோர்டெர... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் கார்கே, ராகுல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஒரு நாள் பயணமாக குவஹாத்தி வந்தடைந்தனர். அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத் தலைவர... மேலும் பார்க்க

தில்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.தில்லி துவாரகா, வசந்த் குஞ்ச், ஹவுஸ் காஸ், பஸ்சிம் விஹார் மற்றும் லோடி எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ள... மேலும் பார்க்க

குறைக்கப்படும் ரெப்போ விகிதம்... கடன் பெற்றோருக்கு நற்செய்தி..!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனின் அடிப்படையில் ரெப்போ வட்டி வ... மேலும் பார்க்க