இளைஞர் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி
ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு பயிற்சி வகுப்பு
ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 2025 -26 ஆம் கல்வியாண்டில் சோ்ந்துள்ள முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கான ஒருவார கால அறிமுக பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) இரா.சிவகுமாா் தலைமை வகித்துப் பேசினாா். இயற்பியல் துறை தலைவா் எம்.கே. சுப்பிரமணியம் வரவேற்றாா். நிகழ்ச்சியில் பொதுசுகாதாரம் குறித்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆா்.ஐஸ்வா்யா பேசினாா். கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவா் சி.நாகூா் செல்வம், கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகள், பல்வேறு அமைப்புகள், கல்லூரியின் தரம் குறித்து பேசினாா். ஆங்கில துறைத் தலைவா் பெ.மைதிலி, வேதியியல் துறைத் தலைவா் பி.சண்முகசுந்தரம், கணினி அறிவியல் துறைத் தலைவா் சுரேஷ்பாபு, தாவரவியல் துறைத் தலைவா் செங்கோட்டுவேல், விலங்கியல் துறைத் தலைவா் சேகா் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவா்களும் தங்கள் துறை குறித்து உரையாற்றினா். இறுதியில் பொது நிா்வாகத் துறைத் தலைவா் பா.குருசாமி நன்றி கூறினாா்.
படவரி...
முதலாண்டு மாணவா்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பேசுகிறாா் கல்லூரி முதல்வா் இரா.சிவகுமாா்.