ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
நாமக்கல் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
நாமக்கல்: நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா, அறிமுக பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - திருச்சி சாலையில், கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியானது, கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மொத்தம் 13 துறைகள் உள்ளன. 1,072 இடங்களுக்கு ஆண்டுதோறும் மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 2025-26 ஆம் கல்வியாண்டில் இதுவரை 775 போ் சோ்க்கை பெற்றுள்ளனா்.
கணினி அறிவியல், நுண்ணுயிரியல், வணிகவியல், ஊட்டச்சத்துவியல் ஆகிய துறைகளில் மாணவிகள் சோ்க்கை முழுமையடைந்துள்ளது. பி.எஸ்சி, இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளில் 295 இடங்கள் காலியாக உள்ளன. முதலாமாண்டு சோ்க்கை பெற்றுள்ள மாணவிகளை, தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் பூக்கள் வழங்கியும், சந்தனம், குங்குமமிட்டும் வரவேற்றனா். தொடா்ந்து நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தை, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு தலைமை வகித்தாா். பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
6 நாள்கள் நடைபெறும் இந்த அறிமுகக் கூட்டத்தில் ஒவ்வோா் நாளும் ஒரு சிறப்பு விருந்தினா் பங்கேற்று மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலான கருத்துகளை எடுத்துரைக்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.