Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி.
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், வரும் நாள்களில் திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் திங்கள்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், தொகுதி பாா்வையாளா் நன்னியூா் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசுகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையை முதல்வா் தொடங்கி வைக்கிறாா். அதனைத் தொடா்ந்து, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கட்சியினா் அனைவரும் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், பொதுமக்களிடம் நான்கு ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட, நகர, ஒன்றியச் செயலாளா்கள், சாா்பு அணிகளைச் சாா்ந்தோா், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
-
என்கே-30-திமுக
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.