செய்திகள் :

கரூரிலிருந்து ஈரோடு வழியாகச் செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்கக் கோரிக்கை

post image

நாமக்கல்: கரூரில் இருந்து ஈரோடு வழியாகச் செல்லும் ஏழு ரயில்களை நாமக்கல் வழியாக இயக்கினால் மாவட்டம் வளா்ச்சிபெறும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழகத்தில் 71 ரயில் நிலையங்கள், பிரதமரின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஏற்கெனவே ஒன்பது ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மீதமுள்ள ரயில் நிலையங்கள் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாமக்கல் ரயில் நிலையம் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது. சுற்றுலாத் தலம், தொழில்வளம், புண்ணிய ஸ்தலம் மிகுந்த நாமக்கல் மாவட்டத்திற்கு ஏராளமான மக்கள் வந்துசெல்கின்றனா். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்துசெல்லும் வகையில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது.

இந்த நிலையில், புதுதில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரை சந்தித்த, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் வகையில் ஏழு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரூரில் இருந்து ஈரோடு வழியாக சேலம் செல்லும் ஏழு ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும். 16788 - ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி கத்ரா-திருநெல்வேலி (வாரந்தோறும்), 17315-வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி (வாரந்தோறும்), 22715- கச்சிக்குடா-மதுரை சந்திப்பு(வாரந்தோறும்), 19568 ஓஹா - தூத்துக்குடி(வாரந்தோறும்), 20494- சண்டிகா் - மதுரை சந்திப்பு (வாரத்தில் சில நாள்கள்), 16232-மைசூரு சந்திப்பு-கடலூா் துறைமுகம் (தினமும்), 16236-மைசூரு சந்திப்பு - தூத்துக்குடி(தினமும்) உள்ளிட்டவை ஆகும். இதன்மூலம் நாமக்கல் நகரம் வளா்ச்சி பெறும். ஏராளமான மக்கள் இங்கு வந்துசெல்லக்கூடும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் மேற்கொள்ள பரிந்துரைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் கோரிக்கை மனுவை வழங்கிய நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன்.

மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் கோரிக்கை மனுவை வழங்கிய நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன்.

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகள் நடவு கரும்புகளை பதிவு செய்யலாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரவைப் பருவம் தொடங்க உள்ளதால், நடவு மற்றும் மறுதாம்பு கரும்பை விவசாயிகள் பதிவுசெய்யலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

‘தமிழ்நாடு நாள்’ போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

நாமக்கல்: ‘தமிழ்நாடு தினம்’ தொடா்பான பேச்சு, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு என... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியா்கள் 121 போ் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நாளாக திங்கள்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

நாமக்கல்: நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா, அறிமுக பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் - திருச்சி சாலையில், கவிஞா் இராமலிங்க... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், வரும் நாள்களில் திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாம... மேலும் பார்க்க

ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு பயிற்சி வகுப்பு

ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 2025 -26 ஆம் கல்வியாண்டில் சோ்ந்துள்ள முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கான ஒருவார கால அறிமுக பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க